சிங்கப்பூரில் இது வரை மின் சிகரெட் பயன்பாடு என்பது புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளுக்கு நாள் அதன் பயன்பாடு அதிகரித்த நிலையில் சிங்கப்பூரில் இப்பொது வேப்ஸ் எனப்படும் இந்த மின் சிகரெட் பயன்பாடு போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக கெடுபிடிகள் உள்ள நிலையில் ஒரு சில இளைஞர்கள் வேப்ஸின் தட்டுப்பாட்டால் தங்கள் நிதானத்தை இழந்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் தனது வீட்டில் தான் பயன்படுத்திய மின்-வேப்பரைசரைக் கண்டுபிடிக்க முடியாததால், ஒரு இளைஞர் தனது தந்தையிடம் கொடூரமாக நடந்துகொண்டுள்ளார். 57 வயதான அந்த தந்தை, தன் மகனின் நலன் கருதி அந்த வேப்பை எடுத்து தர மறுத்தபோது, அந்த இளைஞர் சமையலறையிலிருந்து சுமார் 20 செ.மீ நீளமுள்ள கத்தியை எடுத்து தனது தந்தையை நோக்கிக் காட்டி மிரட்டியுள்ளார். பயந்த அந்த தந்தை செய்வதறியாது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதே நேரம் கடந்த 2023ம் ஆண்டு தனது நண்பர் ஒருவர் மூலம் புதிய தொழில் துவங்கப்போவதாக கூறி, ஒரு வங்கி கணக்கை திறந்துள்ளார் அந்த இளைஞர். அந்த கணக்கிற்கு கிட்டத்தட்ட 3.58 மில்லியன் அளவிலான பணம் ஆன்லைன் மோசடிகள் மூலம் வந்தது தெரியவந்துள்ளது. விரைவில் பணக்காரன் ஆகிவிடலாம் என்று தன் நண்பர் கூறிய வார்த்தைகளை கேட்டு அவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
மேலும் வேப்ஸ் விஷயத்தில் தந்தை தலையில் கைதியை வைத்து அவர் மிரட்டிய விவகாரத்தில் பெயில் கிடைத்தாலும் அடுத்தகட்டமாக அந்த மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது. இந்த வேப்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி, பொருளை இழந்து கடந்த மாதம் ஒரு இளைஞர் தனது மகனுடன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், வேப்ஸ் கேட்டு தந்தையிடம் கத்தியை காட்டிய மகன் மகனின் வழக்கு திடுக்கிட வைக்கிறது.