TamilSaaga
singapore police

முதியவர்.. பா*லியல் ஆசைகாட்டி பணம் பறித்த இளம் பெண் – சிங்கை போலீசில் வசமாக சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் பாலியல் சேவைகளை தேடும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு telegram சேனல் மூலமாக “ஜாஸ்மின்” (போலியான பெயர்) என்கின்ற பெயர் கொண்ட ஒரு பெண், 51 வயது நபரை சந்தித்திருக்கிறார். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி அவர்கள் தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.

ஏற்கனவே அவரோடு உடலுறவு கொள்ள 400 டாலர் கட்டணமாக அவர் பேசியிருந்த நிலையில், அவர்கள் சந்தித்த அந்த நாளில் தனக்கு மாதாவிடாய் ஏற்பட்டுவிட்டது என்று கூறி அவருடன் உடலுறவு கொள்ள மறுத்திருக்கிறார். மேலும் அவரை நேரில் வந்து சந்தித்ததற்காக சுமார் 150 டாலர்களை அவர் பெற்றுச் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு அடுத்த நாள் இரவே அந்த பெண் அந்த 51 வயது நபருக்கு போன் செய்து தனக்கு 200 டாலர் தருமாறு கேட்டு இருக்கிறார். அவரும் உடனடியாக அந்த பணத்தை அனுப்பி வைத்த நிலையில், அடுத்தடுத்த நாள் தொடர்ச்சியாக அவருக்கு கால் செய்து, கூடுதலாக பணம் கேட்டிருக்கிறார். இதற்கு மேல் என்னால் பணம் தர முடியாது. நீ எனக்கான சேவைகளையும் வழங்கவில்லை, ஆகையால் உனக்கு நான் பணம் தர முடியாது என்று அந்த நபர் சொல்லிய நிலையில், அந்த பெண் அவராகவே மெசேஜ் மூலம் அந்த பெண்ணின் அண்ணன் போல நடித்து சில குறுஞ்செய்திகளை அனுப்பி இருக்கிறார்.

அதில் என்னுடைய தங்கை 17 வயதுக்கு கீழ் உள்ளவள், ஆகையால் அவளுக்கு நீ காசு கொடுத்து உடலுறவு கொள்ள அழைத்ததாக போலீஸிடம் புகார் கொடுப்பேன். அப்படி நான் செய்யாமல் இருக்க உடனடியாக 3000 டாலர் பணத்தை அனுப்பு என்று கூறி இருக்கிறார். பயந்து போன அந்த நபரும் அந்த பணத்தை அவருக்கு கொடுக்க, கிட்டத்தட்ட ஐந்து நாள் இடைவெளியில் அந்த நபரிடமிருந்து சுமார் 8,000 டாலர் வரை அந்த பெண் அபகரித்திருக்கிறார்.

வீடியோ காலில் நடந்த அருவருக்கத்தக்க செயல்.. வெளிநாட்டு பெண்ணுக்கு சிங்கப்பூரில் சிறை..!

தொடர்ச்சியாக அந்த பெண் அவரிடம் பணம் கேட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அந்த நபர் இனி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சூழலில் தான் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் மீது இருந்த தவறு தெரிய வந்த நிலையில் தற்போது அவருக்கு 11 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசை வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்து விடலாம் அன்று அந்த பெண் நினைத்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டிருக்கிறது.

Related posts