TamilSaaga

28 வயதில் மரணம்! இறந்த தாயுடன் பல நாட்கள் இருந்த 2 வயது சிறுவன்!

இந்த துயர சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. தனது தாய் இறந்ததைக் கூட அறியாத அந்த மழலை தாயின் உடலுடனே பல நாட்கள் இருந்துள்ளான்.

28 வயது நிறைந்தவர் Zheng, இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் தற்பொழுது ஒரு மகன் உள்ளான். Zheng-ன் கணவர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் Zheng தனது மகனை வளர்த்தபடி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 17 அன்று பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் கண்டறியும் வரை அந்த இரண்டு வயது சிறுவன் இறந்த தனது தாயின் உடலுடன் இருந்துள்ளான்.

பிறகு பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் பெண் எப்பொழுது இறந்தார் அவர் மரணத்தின் காரணம் என்ன என்பதைக்குறித்து விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. 

பின்னர் அந்த சிறுவனுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதால் சிறுவன் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்பொழுது அந்தச்சிறுவன் அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் அங்கு இருந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

 

Related posts