TamilSaaga
swimmers

“தப்புனா தப்புதான்” இரு வெளிநாட்டினர் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய தடை – நீதிமன்றம் அதிரடி..!

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் உள்ள “வரி இல்லாத” (Duty Free Shops) கடையில் இருந்து மூன்று வாசனை திரவிய பாட்டில்களைத் திருடிய குற்றத்திற்காக இரண்டு இத்தாலிய நீச்சல் வீரர்களுக்கு 12 மாத நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் உலக அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த இரு இத்தாலிய நாட்டு நீச்சல் வீராங்கனைகள் தான் சியாரா டரான்டினோ (22 வயது) மற்றும் பெனெடெட்டா பிலாட்டோ (20 வயது).

இந்த இரு வீராங்கனைகளும் கடந்த 2024ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்கள், இவ்வாண்டு சிங்கப்பூரில் நடந்த World Aquatic Championshipல் பங்கேற்க சிங்கப்பூர் வந்திருந்தனர். இத்தாலிக்குத் திரும்பும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, கடந்த ஆகஸ்ட் 14 அன்று சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் திருடியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளியான சிசிடிவி காட்சிகளில் டரான்டினோ, பிலாட்டோவின் சூட்கேஸுக்குள் பொருட்களை வைப்பதை காணமுடிந்தது. சிங்கப்பூரில் உள்ள இத்தாலிய தூதரகம் தலையிட்டு, ஒரு தூதரின் உதவியுடன், இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டு ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும் அங்கிருந்து அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

இறுதியில் ஆகஸ்ட் 19 அன்று, நீதிபதியிடமிருந்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 20 அன்று இத்தாலிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.மேலும் வெளியான ஒரு அறிக்கையில், இத்தாலிய நீச்சல் கூட்டமைப்பு இந்த சம்பவத்தைக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. வழக்கின் உண்மை தன்மை மற்றும் சூழ்நிலைகளைப் பரிசீலித்து, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துடன் கலந்தாலோசித்த பிறகு, ஆகஸ்ட் 19 அன்று இரண்டு பெண்களுக்கும் 12 மாத நிபந்தனை எச்சரிக்கை வழங்கப்பட்டது.

வண்ண வண்ண கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – எப்படி தெரியுமா?

மேலும் இந்த இருவரும் சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்பட்டு, மேலும் மீண்டும் உள்ளே நுழைய தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Related posts