TamilSaaga
india singapore

இந்தியாவின் மகாராஷ்டிரா.. 1 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யும் சிங்கப்பூர் – என்ன திட்டம் தெரியுமா?

சிங்கப்பூரை பொறுத்தவரை நட்பு நாடான இந்தியாவில் சுமார் 170 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீடுகளை கடந்த 2014ம் ஆண்டிலிருந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தன்னுடைய இந்திய பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் நமது சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங்.

நேற்று செப்டம்பர் 2ம் தேதி இரவு இந்திய தலைநகர் புது டெல்லிக்கு சென்ற நமது சிங்கை பிரதமருக்கு இந்தியாவின் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றைய தினம் அந்நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அண்மையில் நடந்து முடிந்த இந்திய சிங்கப்பூர் அமைச்சர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இருவரும் கலந்த ஆலோசனை செய்துள்ளனர்.

மேலும் இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ள சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங் செப்டம்பர் நான்காம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இந்த சூழலில் வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை மகாராஷ்டிராவில் ஒரு முக்கிய திட்டத்தில் முதலீடு செய்யவுள்ளது சிங்கப்பூர்.

கூடுதல் வலுப்பெறும் இந்தியா, சிங்கப்பூர் உறவு – கையெழுத்தாகவுள்ள பல முக்கிய ஒப்பந்தங்கள்..!

சிங்கப்பூர் துறைமுக ஆணையம் (PSA இன்டர்நேஷனல்) 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இது நமது சிங்கப்பூர் பிற நாடுகளில் செய்யும் மிக பெரிய முதலீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது கொள்கலன் முனையத்தை (Container Terminal) (4.8 மில்லியன் TEU) கட்டமைக்கப்பட்டுள்ளது. 2,000 மீட்டர் நீளமுள்ள மிக நீளமான துறைமுகத்தையும் இது கொண்டுள்ளது.

Related posts