TamilSaaga
lawrence wong

கூடுதல் வலுப்பெறும் இந்தியா, சிங்கப்பூர் உறவு – கையெழுத்தாகவுள்ள பல முக்கிய ஒப்பந்தங்கள்..!

இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் முக்கியமான நாடாக திகழ்ந்து வருகிறது நமது சிங்கப்பூர். கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை சுமார் 175 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பல முதலீடுகளை இந்தியாவில் செய்திருக்கிறது சிங்கப்பூர்.

இந்த சூழலில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான 60 ஆண்டுகால நட்பை பிரதிபலிக்கும் வகையில் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நமது சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று செப்டம்பர் இரண்டாம் தேதி மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, அந்நாட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து பல விஷயங்கள் குறித்து கலந்தாய்வு செய்ய இருக்கிறார் சிங்கப்பூர் பிரதமர்.

குறிப்பாக கப்பல் கட்டுமானம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின்போது இரு நாட்டுக்கு இடையே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற செப்டம்பர் நான்காம் தேதி வியாழக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகிய இருவரும் காணொளி காட்சி வாயிலாக இந்தியாவின் மகாராஷ்டிராவில் “கண்டெய்னர் டெர்மினல்” ஒன்றை திறந்து வைக்க உள்ளனர்.

நமது சிங்கப்பூரின் The Port of Singapore Authority (PSA International) கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை இந்த மகாராஷ்டிரா திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை பொறுத்தவரை பெருந்தொற்று காலத்திற்கு பிறகு மட்டும் கிட்டத்தட்ட 60 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீடுகளை இந்தியாவில் செய்திருக்கிறது.

செப்டம்பரில் பள்ளிகளுக்கு விடுமுறை.. உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் கூட்டம் அதிகரிக்கும் – ICA அறிவிப்பு..!

இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானியின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார திட்டம் ஒன்று அண்மையில் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே நீருக்கு அடியில் கேபிள் மூலம் சூரிய சக்தியை கொண்டுசெல்ல ஒரு முக்கிய ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.

Related posts