இன்று (செப். 16) சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மற்றும் சிங்கையில் தந்தை என்று அழைக்கப்படும் பிரதமர் லீ குவான் யூவின் 102வது பிறந்தநாளை அனுசரிக்கிறோம். அவரது மரபு இன்றும் நம்மைச் சுற்றிலும் காணப்படுகிறது, அதே நேரம் இன்று சிங்கை முழுவதும் பூத்து குலுங்கும் Bougainvillea செடிகளுக்கும், நமது லீ குவான் யூ-விற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.
நமது சிங்கப்பூரை பொறுத்தவரை Bougainvillea பூக்கள் பொதுவாக மேல்நிலைப் பாலங்களில் காணப்படுகின்றன. அவை சூடான வானிலையிலும், நிலையான சூரிய ஒளியிலும் தான் நன்றாக வளரும். வானிலை வெப்பமாக இருந்தால், இந்த பூக்கள் மிகவும் அழகாக அதிக அளவில் பூக்கும். இன்று அவை சிங்கை முழுவதும் அழகாக பூத்துகுலுங்க நமது முன்னாள் சிங்கை பிரதமர் லீ குவான் யூ ஒரு மிக முக்கிய காரணம். அவரது ஆட்சி காலத்தில் தான் சிங்கப்பூரின் நிலப்பரப்பை அழகுபடுத்த Bougainvillea இங்கு கொண்டு வரப்பட்டன.
60கள் மற்றும் 70களில் அதாவது பசுமை மாற்றத்தின் ஆரம்ப கட்டத்தில், வேகமாக வளரும் கொடிகள் மற்றும் மரங்கள் மட்டுமே இங்கு நடப்பட்டன. பின்னர் சிங்கப்பூரில் வளர மிகவும் பொருத்தமான இனங்களுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு, பூக்கும் தாவரங்கள் மற்றும் மஞ்சள் சுடர், பிராங்கிபானி மற்றும் Bougainvillea போன்ற மரங்கள் பின்னர் இங்கு கொண்டுவரபட்டன.
சிங்கைக்குள் கடத்தல்.. பலியாகும் வேலை இல்லாத இளைஞர்கள் – சிண்டிகேட்டை தடுக்க முயலும் போலீசார்..!
அழகிய பச்சைப்பசேல் என்ற சுற்றுசூழல் ஒரு மனிதனின் மனதை பெரிய அளவில் அமைதிப்படுத்தும் என்பது லீ குவான் அவர்களின் கருத்து. ஆகவே அவர் காலகட்டத்தில் தான் இங்கு அதிக அளவில் இந்த Bougainvillea செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன. இன்று சிங்கப்பூரில் எங்காவது நீங்கள் இந்த செடியை பார்த்தால் அது அவருடைய காலகட்டத்தில் நட்ட செடியாக கூட இருக்கலாம்.