TamilSaaga
Scam Alert

உஷார் மக்களே உஷார்.. சிங்கப்பூரில் மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் லேட்டஸ்ட் வழி இது தான்..!

சிங்கப்பூரில் ஆன்லைன் மற்றும் Offline மோசடிகள் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாகவே மாறியுள்ளன. கடந்த 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் மோசடி வழக்குகள் மற்றும் அதனால் ஏற்படும் இழப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 2024ம் ஆண்டில் பதிவான 50,000கும் அதிகமான வழக்கில் சுமார் $1.1 பில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் போலீசாரின் துரித நடவடிக்கையால் இந்தத் தொகையில் இருந்து சுமார் $182 மில்லியனை மீட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் மோசடி என்ன?

சிங்கப்பூரில் இந்த ஆண்டை பொருத்தவரை கிட்டத்தட்ட 1.6 மில்லியன் டாலர் அளவிலான பண மோசடி நடந்திருப்பது அரசு அதிகாரிகளை போல நடித்து பணம் பறிக்கும் கும்பலால் தான் என்று ஒரு ஆய்வின் முடிவு கூறியுள்ளது. இவ்வாண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3500 வழக்குகள் பதிவான நிலையில் அதில் அதிகபட்சமாக அரசு அதிகாரிகளை போல நடித்து மோசடி செய்தவர்கள் குறித்த வழக்குகள் தான் அதிகம்.

பொதுமக்கள் மற்றும் சில நேரங்களில் இங்கு பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் போலீசார் பெயரிலும் அல்லது குடிவரவு அதிகாரிகள் பெயரிலும் கால் செய்யும் இந்த மோசடி நபர்கள். அவர்களுடைய வங்கி கணக்கில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது, இது குறித்து உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். அதன் பிறகு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றுங்கள், அல்லது நாங்கள் சொல்லும் செயலியை உங்கள் செல்போனில் உடனடியாக பதிவிறக்கம் செய்யுங்கள், போன்ற அச்சுறுத்தும் வார்த்தைகளை பேசி அதில் சிக்குபவர்களிடம் பெரிய அளவில் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

சில நேரங்களில் அரசு அதிகாரிகளை போல வேடமிட்டுக்கொண்டு வீடியோ காலில் வரும் இந்த மோசடி நபர்கள், நீங்கள் ஒரு குறிப்பிட்ட குற்றத்தை செய்ததற்காக சிக்கி இருக்கிறீர்கள். உடனே இந்த கணக்கிற்கு பணம் அனுப்பினால் மட்டுமே அதற்கான அபராதம் எடுத்துக் கொள்ளப்பட்டு நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள் என்று கூறி பயமுறுத்த துவங்குகின்றனர்.

மொத்தம் 193 ஆபாச புகைப்படங்கள்.. சிங்கப்பூரில் சக பெண் ஊழியரிடம் சிக்கிய நபர் – இறுதியில் என்ன ஆச்சு..?

ஆனால் சிங்கப்பூர் போலீஸ் துறையோ, குடிவரவு அதிகாரிகளோ அல்லது எந்த சிங்கை அரசு அதிகாரியாக இருந்தாலும் பொதுமக்களிடமிருந்து பணம் பெறுவதில்லை என்பதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற போலியான அழைப்பு வந்தால் உடனடியாக 1799 என்கின்ற Scam Shieldன் Help Lineக்கு அழைத்து மறக்காமல் புகார் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை.

Related posts