சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட மத அமைப்பின் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றி வரும் 66 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு சிங்கப்பூர் அரசு சிறை தண்டனை வழங்கியிருக்கிறது. அவர் செய்த அருவருக்கத்தக்க செயல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இப்போது 66 வயதான அந்த நபர் சிங்கப்பூரில் உள்ள ஒரு மத அமைப்பின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் கடந்த 2021ம் ஆண்டு தன்னுடைய நண்பர் ஒருவருடைய மகனை தன்னுடன் சில நாள் வைத்திருந்து. ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான விஷயங்களில் அவரை ஈடுபடுத்தி பயிற்சி கொடுக்க உள்ளதாக கூறியிருக்கிறார். அந்த நண்பரும் தன்னுடைய மகளையும் அழைத்து சென்று இந்த ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான பயிற்சி வகுப்புகளில் ஈடுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கேட்டுள்ளார்.
ஆனால் தன்னுடைய மதத்தின் கொள்கைகளின்படி பெண் பிள்ளைகளை தங்களோடு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறி, அவரை அந்த நண்பரிடமே விட்டுவிட்டு 12 வயது சிறுவனை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு நாட்கள் அந்த சிறுவன் அந்த நபரோடு பயணித்திருக்கிறார். பகல் நேரங்களில் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று பல விஷயங்களை கற்றுக் கொடுத்த அவர் இரவு நேரங்களில் அந்த சிறுவன் உறங்கும் போது பாலியல் ரீதியாக அவனை பெரிய அளவில் துன்புறுத்தியுள்ளார்.
35-க்கும் மேற்பட்ட முறை அவனுடைய அந்தரங்க உறுப்பையும் புகைப்படம் எடுத்திருக்கிறார் அந்த நபர். அவர் செய்வது என்னவென்று அறியாமல் கிட்டத்தட்ட ஆறு நாட்கள் பல கொடுமைகளுக்கு ஆளான அந்த சிறுவன், இறுதியாக தனது தந்தையை ஆறு நாட்கள் கழித்து சந்தித்தபோது நடந்தவற்றை கூறியுள்ளான். அதிர்ந்து போன அந்த தந்தை போலீசில் புகார் கொடுத்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகள் கழித்து தற்பொழுது அந்த நபருக்கு 66 வயதாகி உள்ள நிலையில் 13 வருடம் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். மேலும் அவருக்கு பிரம்படி கொடுக்க முடியாது என்பதால் தண்டனையில் 9 மாதங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அதிரடி உத்தரவை கொடுத்துள்ளது.