TamilSaaga
state courts

11 மாத குழந்தை.. கழுத்தை நெரித்து முகத்தில் காலால் மிதித்து கொடுமைப்படுத்திய நபர் – சிங்கை கோர்ட்டில் இன்று ஆஜர்..!

சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை செப். 19ம் தேதி அன்று 31 வயது நபர் ஒருவர் தான் பராமரித்து வந்த குழந்தையை கழுத்தை நெரித்து, முகத்தில் மிதித்து, தலையை தண்ணீரில் முக்கி, அலமாரியில் உள்ள ஒரு ஹேங்கரில் அந்த பிஞ்சு குழந்தையை தொங்கவிட்டு என்று பல வழிகளில் கொடுமை செய்ததாக குற்றம் சட்டப்பட்டுள்ளார். ஒரு குழந்தையின் வழக்கு என்பதால் இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த நபரின் அடையாளம் மற்றும் பெயரை வெளியிட கோர்ட் மறுத்துள்ளது.

கைதான அந்த நபர் மீது 25கும் மேற்பட்ட “Child Abuse” குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024ல் ஒரு பிளாட்டில், அந்த குழந்தைக்கு ஒன்பது முதல் 11 மாத வயது இருக்கும்போது நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்பதற்கான எந்தவித தகவலும் இல்லை. மேலும் குழந்தையின் தற்போதைய நிலை என்ன என்றும் கோர்ட் கூற மறுத்துள்ளது.

அந்த பிஞ்சு குழந்தையை உடல் ரீதியாக பல கொடுமைகளுக்கு உள்ளாக்கிய அந்த நபர் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள பெற்றோர்களால் நியமிக்கப்பட்ட பாதுகாவலரா? அல்லது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் நீதிமன்றம் வெளியிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பல்வேறு தருணங்களில் அந்த ஆண் குழந்தையை பல கொடுமைகளுக்கு உள்ளாக்கி இருக்கிறார் அந்த நபர். இறுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு அலமாரிக்குள் அந்த குழந்தையை வைத்து சில நிமிடங்கள் பூட்டி வைத்து விட்டு.

பின் கால்களை பிடித்து அந்த குழந்தையை தூக்கி கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் தொலைவில் இருந்த ஒரு மெத்தை மேல் அந்த குழந்தையை வீசி எரிந்தது உள்பட பல்வேறு கொடூரமான செயல்களில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து யார் போலீசில் புகார் கொடுத்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் தற்போது அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்திய மாணவர்கள்.. ஈர்க்கும் சிங்கப்பூரின் NTU, NUS போன்ற பல்கலைக்கழகங்கள் – எப்படி?

இந்த மாதத்தின் இறுதியில் அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்றும் அவருடைய குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் அவருக்கு குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் தண்டனையும் 8,000 டாலர் அபராதமும் விதிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts