சிங்கப்பூரில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிய சக பெண்களின் ஆபாச புகைப்படங்களை எடுத்த வழக்கில் தற்பொழுது ஒருவருக்கு தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. சற்று குறைவான உயரம் கொண்ட ஆடைகளை அணிந்திருக்கும் பெண்களின் கால்களுக்கு இடையே தனது போனை அவர்கள் அறியாத நேரத்தில் புகைப்படம் எடுப்பது, அவர்களுடைய மார்பகங்கள் தெரிவது போல ஆடையை அணிந்து இருந்தால் அதை போட்டோ எடுப்பது என்று அருவருக்க தக்க வகையில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக சுமார் 190-க்கும் அதிகமான புகைப்படங்களை அந்த நபர் எடுத்திருக்கிறார்.
மேலும் கழிவறையில் தனது செல்போனை மறைத்து வைத்து எட்டுக்கும் மேற்பட்ட வீடியோக்களையும் அந்த நபர் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு வரை பல்வேறு சமயங்களில் அவர் இப்படிப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார்.
ஒரு சமயம் தன்னுடைய சக பெண் பணியாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய கால்களுக்கு இடையில் போனை வைத்து போட்டோ எடுத்திருக்கிறார். சட்டென அவர் அதை பார்த்ததும் அவரிடம் இயல்பாக பேசுவது போல் அந்த நபர் நடித்தாலும். தொடர்ச்சியாக ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று அந்த பெண் கேள்வி எழுப்பிய நிலையில் அதை மறுத்து பதில் சொல்லியிருக்கிறார் அந்த நபர்.
இருப்பினும் தன்னை ஒருவர் அநாகரிகமான முறையில் புகைப்படம் எடுப்பதை அறிந்த அந்த பெண் உடனடியாக போலீசில் புகார் கொடுக்க கையும் களவுமாக சிக்கிய அந்த நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ச்சியாக அவர் மீது பல புகார்கள் எழுந்த நிலையில் தற்பொழுது அவருக்கு மூன்று மாதம் மற்றும் 26 வாரங்கள் சிறை தண்டனை வழங்கி சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.