TamilSaaga
state court singapore

வீடியோ காலில் நடந்த அருவருக்கத்தக்க செயல்.. வெளிநாட்டு பெண்ணுக்கு சிங்கப்பூரில் சிறை..!

சிங்கப்பூரில் மூளையில் பிரச்சனை உள்ள 92 வயது முதியவரைப் பராமரிக்க பணியமர்த்தப்பட்ட பணிப்பெண், தனது காதலனுக்கு வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு அந்த முதியவரின் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்கும் தடை உத்தரவு காரணமாக நீதிமன்ற ஆவணங்களில் அந்த 44 வயதான இந்தோனேசியப் பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. நேற்று திங்கள்கிழமை (செப்டம்பர் 15) அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 2024ல் குற்றம் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு 92 வயது, மேலும் அவர் மூளை சம்மந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தன் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு உதவி தேவைப்படும் அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட அவரை ஒருவர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த சூழலில் தான் அவரை கவனித்துக்கொண்டிருந்த இந்தோனேஷியா பணிப்பெண், ஜூலை 27, 2024 அன்று காலை, தனது காதலனுடன் வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பில் இருந்துள்ளார்.

மேலும் அந்த வீடியோ காலின் போது, அந்த தொலைபேசியை அலமாரியில் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவரின் டயப்பரை அகற்றி சுத்தம் செய்ய துவங்கியுள்ளார். மூளை பாதிக்கப்பட்ட அந்த 92 வயது நபர் இடுப்பிலிருந்து கீழே நிர்வாணமாக அந்த படுக்கையில் படுத்திருந்தார். கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் நீடித்த அந்த வீடியோ அழைப்பின் போது, ​அண்ட் ​பணிப்பெண் தனது காதலனிடம் பாதிக்கப்பட்டவரின் நிர்வாணமான உடலை காட்டி சிரித்துள்ளார்.

சிங்கைக்குள் கடத்தல்.. பலியாகும் வேலை இல்லாத இளைஞர்கள் – சிண்டிகேட்டை தடுக்க முயலும் போலீசார்..!

இதை கண்டு அந்த பாதிக்கப்பட்ட நபர் கோபமடைய, உடனே அந்த வீடியோ காலினை கட் செய்துள்ளார். பிறகு அந்த வீட்டில் இருந்த ஒருவர் மூலம் போலீசில் அந்த பெண் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சில CCTV காட்சிகளை வைத்து அந்த பணிப்பெண் செய்த குற்றத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த அருவருக்கத்தக்க செயலை செய்த அந்த பணிப்பெண் உடனே கைது செய்யப்பட்டு இப்பொது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts