TamilSaaga
university

இந்திய மாணவர்கள்.. ஈர்க்கும் சிங்கப்பூரின் NTU, NUS போன்ற பல்கலைக்கழகங்கள் – எப்படி?

ஏற்கனவே கிட்டத்தட்ட 8,000 இந்திய மாணவர்கள் சிங்கப்பூரில் தங்களுடைய கல்வியை பயின்று வருகின்றார்கள் என்றாலும், இன்னும் சிங்கப்பூர் இந்திய மாணவர்கள் மத்தியில் விருப்பமான ஒரு இடத்தை பெறவில்லை என்றே கூறலாம். தங்களுடைய குழந்தைகளின் உயர் கல்வி என்று வரும் பொழுது பெற்றோர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளை தான் முதல் தேர்வாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிலிருந்து வெறும் ஐந்து மணி நேர விமான பயண தூரத்தில் இருக்கும் சிங்கப்பூரை பலரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

இன்னும் சொல்லப்போனால் உலகிலேயே சிறந்த NTU, NUS மற்றும் SMU உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் சிங்கப்பூரில் இருந்தும் இந்திய மாணவர்கள் சிங்கப்பூரை தேர்வு செய்யாததற்கு ஒரு பெரிய காரணம் இங்கு ஆகும் வாழ்க்கை செலவுகள் தான். ஆனால் உண்மையில் பிற நாடுகளை ஒப்பிடும் பொழுது சிங்கப்பூரில் உயர் கல்வி படிப்பது மிகவும் சிறந்தது. பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தங்களுடைய மேற்படிப்புக்காக சிங்கப்பூர் வரும் பல மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பு-கள் பெரிய அளவில் வழங்கப்படுகிறது.

NTU-வில், ASEAN இளங்கலை உதவித்தொகை முழு கல்விக் கட்டணத்தையும் (ஆண்டுக்கு ~SGD 31,000) தள்ளுபடி செய்கிறது மற்றும் வாழ்க்கை செலவுகளுக்காக ஆண்டுக்கு SGD 5,800 உதவித்தொகையை வழங்குகிறது. இங்கு நான்கு ஆண்டுகளுக்கான ஆகும் ஒட்டுமொத்த செலவில், அமெரிக்காவில் பட்டம் பெரும் ஒரு பகுதியை கூட முடக்கிய முடியாது என்பது தான் உண்மை.

உஷார் மக்களே உஷார்.. சிங்கப்பூரில் மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் லேட்டஸ்ட் வழி இது தான்..!

NUS-ல், அறிவியல் & தொழில்நுட்ப இளங்கலை உதவித்தொகை வழங்கப்படுகிறது, உயர் சாதனை படைக்கும் இந்திய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், வாழ்க்கை உதவித்தொகை மற்றும் செட்டில்-இன் கொடுப்பனவு ஆகியவை வழங்கப்படுகிறது. உரிய உரிமம் பெற்று, பல மாணவர்கள் பகுதிநேர வேலை செய்து கிட்டத்தட்ட கடனற்ற பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.

Related posts