TamilSaaga
india singapore

வர்த்தகம் துவங்கி விமான சேவை வரை.. இந்தியா – சிங்கை இடையே போடப்பட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள்..!

சிங்கப்பூர் பிரதமராக பதியேற்ற பிறகு, முதல் முறையாக மூன்று நாள் பயணமாக கடந்த செப்டம்பர் 2ம் தேதி இந்தியா சென்றார் நமது பிரதமர் லாரன்ஸ் வோங். இந்தியா சிங்கப்பூர் இடையேயான 60 ஆண்டுகால நட்பை கொண்டாடும் வண்ணம் அவருடைய இந்த பயணம் அமைந்தது. இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் உள்ளிட்ட பலரை இந்த பயணத்தின்போது சந்தித்தார் லாரன்ஸ் வோங்.

கையெழுத்தான ஒப்பந்தங்கள்

புதிய சாலை வரைபடம்

சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு விரிவான கூட்டாண்மையை வழிநடத்தும் புதிய சாலை வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இது மேம்பட்ட உற்பத்தி, கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் அணுசக்தி போன்ற புதிய துறைகளுக்கு ஒத்துழைப்பை கொடுக்கும் என்றும் நேற்று செப்டம்பர் 4ம் தேதி லாரன்ஸ் ஒங்க அவர்களை சந்திக்கும்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்

செமி கண்டக்டர்

இந்தியாவின் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், சென்னையில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு மையத்திற்கு உலகளாவிய உறுதுணையாக சிங்கை செயல்படும் என்றும் கூறினார். விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு (MRO) மற்றும் குறைக்கடத்திகள் (Semi Conductor) போன்ற துறைகளில் மாநில அளவிலான திறன் மையங்களை அமைக்க சிங்கப்பூர் உதவும் என்றும் லாரன்ஸ் வோங் கூறினார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை

கையெழுத்தான ஐந்து ஒப்பந்தங்களில், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்கும் இடையே டிஜிட்டல் சொத்து கண்டுபிடிப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) உள்ளது. இது எல்லை தாண்டிய நிதி பரிவர்த்தனையை ஆதரிக்க மிகவும் திறமையான டிஜிட்டல் நிதி சேனல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

விமான போக்குவரத்து

இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும், நமது சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே வாராந்திர அளவில் 246 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அதை மேலும் அதிகரிக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கும், இந்தியாவிற்கும் இடையே 60 ஆண்டுகால நட்பும், நம்பிக்கையும் உள்ளது – லாரன்ஸ் வோங்..!

விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விண்வெளித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இந்தியா இதுவரை கிட்டத்தட்ட 20 சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts