சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் திறன்களை மதிப்பீடு செய்து, அதில் குறைபாடுகளை கண்டறிந்து, எதிர்காலத்தில் அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிய ஆன்லைன் தளத்தை SkillsFuture Singapore (SSG) அறிமுகப்படுத்தியுள்ளது.
TalentTrack மற்றும் TalentTrack+ எனப்படும் இந்த டிஜிட்டல் தளங்கள், 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற்ற SkillsFuture Human Capital Conference இல் வெளியிடப்பட்டன.
TalentTrack தளம் இலவசமாக வழங்கப்படுகிறது.
நிறுவனங்களின் துறைக்கு ஏற்ப பணியாளர்களுக்கு தேவைப்படும் திறன்களை கண்டறியவும், அவர்களுக்குத் தேவைப்படும் பயிற்சி பாடங்களைத் தேர்வு செய்யவும், அரசு வழங்கும் SSG பயிற்சி நிதி சார்ந்த தகவல்களுக்கும், அதே துறையில் உள்ள பிற நிறுவனங்களுடன் தங்களை ஒப்பீடு செய்யவும் (benchmark) இந்தத்தளம் உதவுகிறது.
இந்த தளத்தை GoBusiness Dashboard-ல் Singpass தேர்வின் கீழ் பயன்படுத்தலாம். 2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் சோதனை வடிவில் வெளியிடப்பட்டபோது, 7,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்தியிருந்தன.
மேலும் மேம்படுத்தப்பட்ட HR களுக்கான (HRTech) TalentTrack+ தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
- ஒவ்வொரு பணியாளரின் திறன்களையும் ஆய்வு செய்கிறது,
- குறைவுகள் எவை என்பதை காட்டுகிறது,
- மேலும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற அளவில் பயிற்சிகளை பரிந்துரைக்கிறது.
இது Career and Skills Passport (SSG-யின் அரசு சான்றளித்த திறன் தகவல் தளம்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்கள் தங்கள் திறன் மற்றும் அது சார்ந்த ஆவணங்களை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
முதற் கட்டமாக, உள்ளூர் நிறுவனமான JobTech இதில் பார்ட்னராக நியமிக்கப்பட்டுள்ளது. அடிப்படையான திறன் மதிப்பீடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது; மேலும் முழுமையான வசதிகளைப் பெற, நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருவருக்கு $115 செலுத்த வேண்டும்.
சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க