மலேசியாவைச் சேர்ந்த 91 வயது முதியவர் Ong Kim Hwa. வயதிற்கும் அவர் செய்த விஷயத்துக்கும் சம்மந்தமே இல்லை.
முப்பதைக் கடந்தவர்களே முட்டியைப் பிடித்துக்கொள்கிற இந்தக் காலத்தில் 10 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தை 1 மணி நேரம் 46 நிமிடத்தில் ஓடி முடித்துள்ளார் Ong Kim Hwa.
1422 பேர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில், 50 வயதிற்கு மேற்பட்ட பிரிவில், 118-வது இடத்தைப் பிடித்துள்ளார் Ong Kim Hwa. மொத்த போட்டியாளர்களில், 1296 -வது இடத்தைப் பிடித்து வயது என்பது ஒரு தடையே இல்லை என நிரூபித்துள்ளார்.
இந்த பந்தயம் இவருக்கு முதல் பந்தயம் இல்லை. கடந்த வாரத்தில் மலேசியாவில் நடைபெற்ற, IJM Land Half Marathon போட்டியிலும் பங்குபெற்று 12 கி.மீ தூரத்தை, 2 மணி நேரம் 2 நிமிட நேரத்தில் கடந்துள்ளார்.
இதன் பின்னர் Kepong-ல் நடைபெறும் போட்டியிலும் பங்குபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வயது மூப்பிலும், வலுகுறையாத கால்களுடன் ஓடும் இவரது கால்களுக்கு, ஒரு சல்யூட்.